ஈரேழு பதினாலு லோகம் அர்த்தம்

ஈரேழு பதினாலு லோகம்
((இரு+ஏழு=பதினாலு+லோகம்))

இந்துமத வேத மரபின்படி இந்தப் பிரபஞ்சத்தில் பதினான்கு உலகங்கள் இருப்பதாக நம்பப்படுகிறது…ஈரேழு என்றால் இரண்டு ஏழு அதாவது பதினான்கு என்று அர்த்தம்…மேலுலகங்கள் ஏழு மற்றும் கீழுலகங்கள் ஏழு மொத்தம் பதினான்கு உலகங்கள் எனக் கணக்கு…நாம் வாழும் பூவுலகம் மேலுலகத்தில் உள்ளதாகும்…ஆகவே பூவுலகிற்கு மேல் ஆறு உலகங்களும், கீழே ஏழு உலகங்களும் இருக்கின்றன. அவைகள்;-

7. சத்யலோகம்
6. தபோலோகம்
5. ஜனோலோகம்
4. மஹர்லோகம்
3. சுவர்லோகம்
2. புவர்லோகம்

↑ மேல் உலகங்கள் ஏழு
______________________________________
1. பூலோகம் – நாம் வாழும் மண்ணுலகு
_____________________________________

↓கீழ் உலகங்கள் ஏழு

அதலலோகம்
விதலலோகம்
சுதலலோகம்
தலாதலலோகம்
மகாதலலோகம்
ரஸாதலலோகம்
பாதாளலோகம்

 

Refer: http://www.siththarkal.com/2013/12/blog-post_23.html

 

Aazhi Mazhai Kanna -ஆழி மழை கண்ணா

Read in English http://godharangan.blogspot.in/2010/12/day-4-aazhi-mazhai-kanna.html

இந்தியா ஒரு புண்ணியபூமி .., தெய்வீக பூமி… கர்மபூமி … என்று உலக மக்களால் போற்றப்படும் நாடு இந்தியநாடு ….

சித்தர்களும், முனிவர்களும், ரிஷிகளும் , முனிகளும் வாழ்ந்த பூமி அண்ட சராசரங்களையும் அறிவியலே இல்லாத காலங்களில் .. அத்மஞ்சனங்களின் மூலம் எடுத்துச்சொன்னவர்கள் … நம் முனோர்கள் …வாழும் முறை, வாழ்வதற்க்கான வழி முறைகள் , வாழ்க்கை தத்துவம் , மருத்துவம், வானசாஸ்திரம் , கணிதம் , பொருளாதாரம் போன்ற எல்லா துறைகளிலும் வல்லவர்கள் … இந்தியர்கள் .,
5000 வருடங்களுக்கு முன்னரே … மழை எப்படி பொழிகிறது என்று , ஆண்டாள் , கோதை நாச்சியார் திருப்பாவையில் சொல்லி இருக்கிறார்

ஆழி மழைக்கண்ணா ஒன்றுநீ கைகரவேல்
ஆழிஉள் புக்கு முகந்துகொடு ஆர்த்துஏறி
ஊழி முதல்வன் உருவம்போல் மெய்கறுத்துப்
பாழியம் தோளுடைப் பற்பனாபன் கையில்
ஆழி போல்மின்னி வலம்புரி போல் நின்று அதிர்ந்து
தாழாதே சார்ங்க முதைத்த சரமழைபோல்
வாழ உலகினில் பெய்திடாய் நாங்களும்
மார்கழி நீராட மகிழ்ந்தேலோர் எம்பாவாய்.

விளக்கவுரை

மூன்றாம் பாசுரத்தில் நோன்பு நோற்பதால் கிடைக்கும் பலனைச் சொன்னார் ஆண்டாள். மும்மாரி பெய்து பசுக்கள் பாலால் இல்லம் நிறைத்து செல்வம் பெருகும் என்றவர், இந்தப் பாசுரத்தில் தாம் சொன்ன சுபிட்சத்துக்காக கண்ணனே கருணை மழையாகப் பொழிய வேண்டும் என்று வேண்டுகிறார்.
மழை மண்டலத்துக்குத் தலைவனாக விளங்கும் கண்ணனே! உன் கொடையில் எதையும் நீ ஒளிக்காமல் அருள வேண்டும். நீ செய்ய வேண்டிய பணி ஒன்றும் உண்டு. அது, நீ கடலினுள் புகுந்து, அங்கிருந்து நீரினை முகந்து கொண்டு பேரொலி எழுப்பி கர்ஜனை செய்து, ஆகாயத்தின் மேல் ஏறி, ஊழி காலம் முதலான அனைத்துக்கும் காரணனாக விளங்கும் எம்பெருமானின் திருமேனியைப் போலே கறுத்து, பெருமை பொருந்திய சுந்தரத் தோளுடையானும், நாபியிலே கமல மலர் கொண்டு திகழும் பெருமானின் வலக்கையிலே திகழும் சக்கரத்தாழ்வானாகிய திருவாழியைப் போலே ஒளிர்ந்து, இடது கரத்தில் திகழும் பாஞ்சஜன்யப் பெரும் சங்கினைப் போலே நிலை நின்று முழக்கி, உன் சார்ங்கம் ஆகிற வில்லில் இருந்து விரைந்து புறப்படும் அம்புகளைப் போலே, இந்த உலகத்தார் அனைவரும் வாழும்படியாகவும், கண்ணன் எம்மானுடன் கலந்து மகிழ நோன்பு நோற்கும் நாங்களும் உளம் மகிழ மார்கழி நீராட்டம் செய்யும்படி, தாமதம் ஏதுமின்றி மழை பொழிய வைத்திடுவாய்…- என்று கண்ணனை வேண்டுகிறார் ஆண்டாள். மழை எப்படிப் பொழிகிறது என்ற அறிவியல் நுட்பத்தைத் தம் பாசுரத்தில் புகுத்தி, அதற்குக் காரணன் கண்ணனே என்று கூறி, அனைவரும் அவனைப் பிரார்த்தனை செய்யப் பணிக்கிறார் ஸ்ரீஆண்டாள் நாச்சியார்!

Src:
http://godharangan.blogspot.in/…/day-4-aazhi-mazhai-kanna.h…