ராஜா எப்போதும் ராஜா தான்
ரசனை நம் தாத்தா ,அப்பா ,பேரன் முதல் கண்டிப்பாக வேறுபடும்.பாகவதர் முதல் ரகுமான் வரை இசையில் கொடி நாட்டியவர்கள் பல அதில் இன்றும் நிலைத்து நிற்பவர்கள் சில. அப்படி “சில” த்தின் ராஜா தான் நம் இசைஞானி.லண்டனுக்குப் போய் இசையை கற்றுகொண்டு வந்தாலும் சிலர் அமைக்கும் இசைஅவர்களாலேயே கேட்க முடியாத அளவிற்கு ரம்மியமாக(???) இருக்கிறது. அப்படி இருக்கையில் பண்ணைபுரத்தில் இருந்து கூட ஒரு பீத்தோவன் வர முடியும் என்பதற்கு ராஜாவைத் தவிர வேறுயாரு சான்று. அவரின் படைப்புகளை தரவரிசை படுத்த எவராலும் முடியாது.இருப்பினும் எனது ப்ளே லிஸ்டில் அதிகமாக கேட்கப்பட்ட பாடல்கள் என்ற வகையில் ஒரு தரவரிசை
10. ராஜ ராஜ சோழன்-ரெட்டைவால் குருவி
9.மண்ணில் இந்த காதல்-கேளடி கண்மணி
8.கண்மணியே காதல்-ஆறிலிருந்து அறுபதுவரை
7.ஆலபோல்- எஜமான்
6.சுந்தரி கண்ணால்-தளபதி
5.பூங்காற்று புதிதானது-மூன்றாம் பிறை
4.என் வானிலே-ஜானி
3.மன்றம் வந்த-மௌன ராகம்
2.நீ பார்த்த பார்வை-ஹே ராம்
1.தென்றல் வந்து தீண்டும்போது-அவதாரம்
இதில் முதல் இரண்டு பாடல்கள் ராஜாவின் ஆளுமையை உலகமறிய செய்தவை.”நீ பார்த்த பார்வைக்கொரு நன்றி” ஒரு கேன்வாஸ் பெய்ன்டிங் போல விரிந்து வார்த்தைகள் வற்றி காதல் மட்டுமே மிஞ்சிய நிலைக்கு நம்மை இட்டு செல்லும்.”தென்றல் வந்து தீண்டும்போது” தூரிகையில் தேன் வடித்து இழைத்த ஓவியம்.
பாடல்கள் பல ராஜாவின் மகுடங்களாக இருப்பினும் அதில் வைரமாக இருப்பது அவரின் பிண்ணணி இசை. இப்போது பிண்ணணி இசை என்பது படம் பார்ப்பவரை படுக்க…
View original post 66 more words
Thanks for sharing such a good thought, piece of writing is good, thats why i have read it completely